

இலங்கையின் கிராமப்புறத்தில் அமைந்துள்ள நெலுவ தேசிய பாடசாலை மற்றும் மெதகம தேசிய பாடசாலை ஆகியவற்றில் பிளாஸ்டிக்சைக்கிள் இரண்டு விழிப்புணர்வு அமர்வுகளை மே 27, 2025 அன்று நடத்தியது. இந்த அமர்வுகள், மனித ஆரோக்கியம், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீங்கு விளைவிக்கும் தாக்கம் குறித்த அறிவை மாணவர்களுக்கு வழங்கின. அதே நேரத்தில் 4R களான மறுத்தல், குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மீள்சுழற்சி என்பவற்றை ஏற்றுக்கொள்ள அவர்களை ஊக்குவித்தன.