

செப்டம்பர் 09, 2025 அன்று, உலக தூய்மைப்படுத்தும் நாள் 2025 ஐ நினைவுகூரும் வகையில், பாணந்துறையின் எகோட உயன கடற்கரையில் பிளாஸ்டிக்சைக்கிள், பேர்ல் புரெட்க்டர்ஸ் உடன் இணைந்து பிளாஸ்டிக் துகள்களை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது. இந்த முயற்சியில் குழுவைச் சேர்ந்த மொத்தம் 26 தன்னார்வலர்கள் தீவிரமாகப் பங்கேற்று, கரையோரத்தில் கரையொதுங்கிய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற வகையான பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர்.
மே மாத இறுதியில் கேரள கடற்கரையில் MSC ELSA 03 மூழ்கியதால் ஏற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் கசிவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த சுத்தம் செய்யும் பணி ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த மூழ்குதலின் விளைவாக இலங்கையின் மேற்கு கடற்கரையை கணிசமான அளவு இந்த பிளாஸ்டிக் துகள்கள் வந்தடைந்தன. இந்த சுத்தம் செய்யும் பணியின் மூலம், தன்னார்வலர்கள் கடற்கரையிலிருந்து 97 கிலோகிராம் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டை வெற்றிகரமாக மீட்டனர்.